Mnadu News

மேகாலயத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை: பின்னடைவில் முதல் அமைச்சர்.

மேகாலய மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேகாலய மாநிலம் தெற்கு துரா தொகுதியில் பாஜக வேட்பாளர் பெர்நார்டு மரக் முன்னிலையில் உள்ளார். மேகாலயத்தின் முதல் அமைச்சர்; சங்மா பின்னடைவை சந்தித்துள்ளார்.ஒட்டுமொத்தமாக இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், பாஜக – 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் 23 இடங்களில் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால், இதுவரை எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

Share this post with your friends