Mnadu News

மேகாலயா முதல் அமைச்சராக கன்ராட் சங்மா வரும் 7-ஆம் தேதி பதவியேற்பு.

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி சங்மாவின் கட்சி 26 இடங்களை கைப்பற்றியது.இந்நிலையில், முன்னாள் துணை முதல்-அமைச்சர் மற்றும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான பிரெஸ்டோன் டின்சாங் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா வருகிற 7-ந்தேதி நடைபெறும் என கூறியுள்ளார். இதன்படி, கட்சி தலைவர் கன்ராட் சங்மா முதல்-அமைச்சராக பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளனர். அசாம் முதல்-அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கலந்து கொள்வார். போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். பிற கட்சிகளிடமும் நாங்கள் ஆதரவு கேட்டு வருகிறோம். அதனால், எண்ணிக்கை 38 முதல் 40 ஆக அதிகரிக்க கூடும் என டின்சாங் கூறியுள்ளார்.பா.ஜ.க. மற்றும் எச்.எஸ்.பி.டி.பி. கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 32 பேரின் ஆதரவு அக்கட்சிக்கு உள்ளது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More