Mnadu News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 11,600கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து மாலையில் வினாடிக்கு 21,600கன அடியாகவும் இரவில் வினாடிக்கு 23,500 கன டியாகவும் அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 24,100கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,000கன அடியும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 2,500கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6-வது நாளாக 120அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More