காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது.,இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 600 கன அடியிலிருந்து 11ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More