மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு மாலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 896 கன அடியிலிருந்து வினாடிக்கு 933 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 104.21அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 103.87 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 79.94 டி.எம்.சியாக உள்ளது. மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More