காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக அணை நிரம்பியது. பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து படிப்படியாக குறைந்தது.காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு ஜனவரி 28ஆம் தேதி மாலை முதல் நிறுத்தப்பட்டது. அப்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.87 அடியாக இருந்தது. தற்போது குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நீர் வரத்தும் திறப்பும் சீராக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் உள்ளது.இன்று 238- வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. இன்று காலைமேட்டூர் அணை நீர்மட்டம் 103.52 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1212 கன அடியிலிருந்து 1224கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 69.48 டி.எம்.சியாக உள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More