காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 334 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 346 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 101 புள்ளி மூன்று ஒன்பது அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 66 புள்ளி ஆறு ஐந்து டி.எம்.சியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More