கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைத்து வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 224 கன அடியிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 373 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது.அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டுள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.52 அடியாக உள்ளது. நீர் இருப்பு 69.48 டி.எம்.சி.யாக உள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More