காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 4வது நாளாக வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீர்மின் நிலையங்கள் வழியாகவும் வெள்ள நீர் வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி வீதம் உபரிநீர் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 24-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More