மேற்கு வங்கத்தில் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜூலை 8ஆம் தேதி கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கூச் பெஹார் மாவட்டத்தில் பா.ஜ.க வேட்பாளரின் உறவினர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில ஆளுநர்; சி.வி.ஆனந்த் போஸ், தேர்தல் அமைதியாக நடைபெறும். இது மக்களின் வெற்றியாக இருக்கும். என்று கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More