Mnadu News

மே.வங்க ரயில் விபத்து: குடியரசு தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends