Mnadu News

மே 19 வரை கோ ஃபர்ஸ்ட் விமான சேவைகள் ரத்து: நிறுவனம் அறிவிப்பு.

வாடியா குழுமத்தின் ‘கோ ஃபா்ஸ்ட்’ விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதன் விமான சேவைகள் மே 3ஆம் தேதி முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளன.இதற்கிடையே, விமான சேவையை தொடர்ந்து இயக்க முடியாதது மற்றும் பாதுகாப்பான, போதுமான சேவைகளைக் கொடுக்க முடியாதது குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்கமைப்பு இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதுவரை டிக்கெட் விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், மே 19 வரை விமான சேவையை நிறுத்துவதாகவும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் கோ ஃபர்ஸ்ட் நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More