வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும், சுனில் குமார் விடுமுறையில் மனைவி பாவனாவை பார்க்க சொந்த மாநிலமான மத்திய பிரதேசம் குவாலியர் கம்பம் நகருக்கு வந்துள்ளாhர். இவரிடம் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர,; நீங்கள் சென்ற பிறகு உங்கள் மனைவி என் கணவருடன் நீண்ட நேரம் பேசுகிறார் என்று புகார் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சுனில், பாவனாவின் மொபைல் போனை எடுத்து வைத்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி,இரவு 2 மணியளவில் கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, சூடான எண்ணெயைக் கொண்டு வந்து கணவனின் அந்தரங்க பகுதியில் ஊற்றினார். இதில் அந்த பகுதி 70 சதவீதம் எரிந்துள்ளது. இதையடுத்து மனைவி வீட்டை விட்டு ஓடிவிட்டார். வலியால் துடித்த சுனிலை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கணவரின் வாக்குமூலத்தின் பேரில் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மனைவி பாவனவை தேடி வருகின்றனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More