பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசி உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆவேசமாக வாக்களித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது கர்நாடக மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைக் காட்டுகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர், டஜன் கணக்கான அமைச்சர்கள், பிற மாநில முதல் அமைச்சர்கள் இங்கு முகாமிட்டிருந்தும், ஆள்பலம், பணபலம் என அவர்களின் முழு பலம் பயன்படுத்தப்பட்ட போதிலும், மக்கள் காங்கிரசுக்கு ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். இது மக்களின் வெற்றி.மக்கள் எங்களின் பணியை ஆதரித்துள்ளனர். வெற்றி பெற்றாலும் தோற்கடிக்கப்பட்டாலும் மக்களுக்கு ஜனநாயகப் பணியாற்ற வேண்டும்.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More