Mnadu News

மோடிக்கு கிடைக்கும் பாராட்டை காங்கிரசால் பொறுத்து கொள்ள முடியவில்லை:நட்டா பேச்சு.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள பாஜக., தேசிய தலைவர் நட்டா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரலாற்றில் மிகப்பெரிய நில மோசடிகள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் தான் நடந்தது. ஹேமந்த் சோரன் ஆட்சியில், சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.,பாஜக., ஆட்சியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், 50 கோடி மக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ், 4 கோடி பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டது. இந்த திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.உலக அளவில் உள்ள தலைவர்கள் பிரதமர் மோடியை பாரட்டி வருகின்றனர். ஆனால் பிரதமரை காங்கிரசார் பாம்பு, படிப்பறிவு இல்லாதவர், டீ விற்பவர் உள்ளிட்ட வார்த்தைகளால் அழைக்கின்றனர். பிரதமரை புகழ்வது காங்கிரஸ் கட்சியினருக்கு பொறுக்க முடியவில்லை. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. என்று பேசி உள்ளார்.

Share this post with your friends