Mnadu News

மோடியை சந்திக்க மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து இதற்காக முதலமைச்சர் நேரம் கேட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.இந்நிலையில் நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More