Mnadu News

மோடி ஏன் இந்த கனவை நிறைவேற்றவில்லை?: பிரியங்கா காந்தி வதேரா கேள்வி.

கர்நாடகாவில், விஜயபுராவில்; நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா,கர்நாடகாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை பாஜகவினர் கொள்ளையடித்துள்ளனர்.அந்தப் பணத்தில் 100 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள், 30 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம்.அதே நேரம், இன்று அவர்களால் உங்கள் பிரச்னைகளை பற்றி உங்கள் முன் பேச முடியாது, அதனால் உங்கள் வளர்ச்சிக்கும், உங்கள் வளர்ச்சிக்கும் தொடர்பில்லாத சில புதிய பிரச்னைகளை தினமும் எழுப்புகிறார்கள்.அதே நேரம், கர்நாடகாவை நாட்டின் வளர்ச்சிக்கு உதாரணமாக மாற்ற வேண்டும் என கனவு கண்டேன் என பிரதமர் கூறுகிறார். கர்நாடகாவில் பாஜக, ஆட்சி இருந்தபோது, மோடி ஏன் இந்த கனவை நிறைவேற்றவில்லை?. என்று கேள்வி எமுப்பி உள்ளார்.

Share this post with your friends