மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, ‘பிரதமர் நரேந்திர மோடியை கொல்லத் தயாராக இருங்கள்’ என தொண்டர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படேரியாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவரைக் கைது செய்ய வலியுறுத்தினர். அதன்பேரில், ராஜா படேரியா மீது மத்தியப் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இந்நிலையில், பன்னா மாவட்ட நீதிமன்றத்தில் ராஜா படேரியா இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ராஜா படேரியா, ‘சித்தாந்தத்திற்காக நான் போராடுகிறேன். மோடி குறித்து அந்த வார்த்தைகளை நான் சொல்லவில்லை. நான் மகாத்மா காந்தியின் சீடர்’ என்று கூறினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More