Mnadu News

மோடி வருகையால் புதுப்பொலிவு பெற்ற மோர்பி மருத்துவமனை.

குஜராத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் புனரமைக்கப்டட சில நாட்களில் அறுந்து விபத்துக்குள்ளானதில் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மோர்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிடவிருக்கிறார். அதோடு, விபத்தில் காயமடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரையும் நேரில் சந்தித்து மோடி நலம் விசாரிக்கவிருக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அரசு மருத்துவமனை ஊழியர்களும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையில் தற்போது 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதி மஞ்சள் நிறத்திலும், மருத்துவமனையின் உள் பகுதிகள் வெள்ளை நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
இதனை காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. இரவோடு இரவாக அரசு மருத்துவமனையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வர்ணம் பூசும் பணிகள் உள்பட, புதிதாக டைல்ஸ் ஒட்டுதல், சுவர்களை பூசுதல் என பிரதமரி மோடியின் வருகைக்காக மருத்துவமனை அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More