Mnadu News

மோடி வருகை: அமெரிக்காவில் துவங்கியது வாழ்த்து கோஷம்.

இந்தியாவில் இருந்து வரும் 20ஆம் தேதி புறப்படும் பிரதமர் மோடி, 21ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு, 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை எதிர்ப்பார்த்து, அமெரிக்காவில் வாழும் இந்திய வாழ் மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க மக்களும் கையில் பிரதமர் மோடி புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திய படி, ஆங்காங்கே வாழ்த்து கோஷம் எழுப்பி வருகின்றனர். அதோடு, அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை உட்பட பல்வேறு நகரங்களில் பிரதமர் வருகையை எதிர்ப்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

Share this post with your friends