Mnadu News

யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையோர மரங்கள் மீது துப்பாக்கியுடன் காவலர்கள்.

கடந்த மே 29ஆம் தேதி, பொறியாளர் ஒருவர் குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, வழிப்பறி நடந்துள்ளது. அவர்களிடமிருந்து பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபோல ஜூன் 2ஆம் தேதியும் காரில் சென்றவர்களிடம் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இவ்விரண்டு சம்பவங்களும் மாலை நேரத்தில் நடந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசியுள்ளனர். அப்போது காரில் வந்தவர்கள் சாலையோரம் காரை நிறுத்தியபோது, அவர்களிடமிருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலை முழுக்க சுமார் 100 காவலர்கள் சாதாரண உடையில், பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல காவலர்கள் கையில் துப்பாக்கி, பைனாகுலர் ஏந்தி, மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டு காவலில் ஈடுபட்டனர். முன்னதாக, சுங்கச்சாவடிகளிலேயே, ஒலிப்பெருக்கி மூலம், சாலையில் நடுவழியில் வாகனத்தை எங்கும் நிறுத்தக் கூடாது என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.அதே நேரம், யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More