Mnadu News

யாருக்கு ஆதரவு என்பதை நேரம் வரும்போது அறிவிப்போம்.

கர்நாடக தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளில்;, பாஜக 84 முதல் 100 தொகுதிகள் வரையும், காங்கிரஸ் 94 முதல் 108 வரையிலும், மஜத 24 முதல் 32 தொகுதிகள் வரையிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால்.மதசாற்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு யாருக்கு கிடைக்குமோ அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்கின்ற சூழல் நிலவும் நிலையில். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மதசாற்பற்ற ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்வீர் அகமது,தேர்தல் முடிவுக்குப் பிறகு யாருடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். உரிய நேரம் வரும்போது பொதுமக்களுக்கு அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends