சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவைதொடங்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமான சேவை தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவிலிருந்து விமான சேவையை இலங்கை ரத்து செய்திருந்தது. இன்று காலை அலையன்ஸ் ஏர் சர்வீஸ் நிறுவனத்தின் முதல் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டு, 11.25 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் கொண்ட 14 பயணிகள் மட்டுமே இந்த விமானத்தில் இருந்தனர். யாழ்ப்பாணம் விமான நிலையத்தில், வந்து தரையிறங்கிய விமானத்தை வரவேற்கும் விதமாக எளிய நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து விமானம் புறப்பட்டு சென்னை வருகிறது. இதுபோல வாரத்தில் நான்கு நாள்களுக்கு இரண்டு வழித்தடங்களிலும் விமானங்கள் இயக்கப்படவிருக்கின்றன.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளும் முயற்சியில் உள்ள இலங்கைக்கு, இந்த விமான சேவை மூலம் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை இலங்கைக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் பிரிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More