கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வர்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மெயின் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் யுபிஎஸ்சி மெயின் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More