இந்திய தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் 12 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 7 புள்ளி 7 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இதுதவிர, கடந்த அக்டோபர் மாதம் ஐஎம்பிஎஸ் சேவை மூலம் வங்கிகள் இடையிலான உடனடி பரிவர்த்தனைகள் 48 கோடியே 25 லட்சமாக இருந்தது. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 4 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அதோடு, ஃபாஸ்ட்டேக் மூலம் செய்யப்படும் சுங்கக் கட்டண வசூல் அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரத்து 451 கோடியே 87 லட்சமாக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More