தொழில்நுட்பம் வளர்ந்து உள்ள இந்த காலகட்டத்தில் எவ்வளவோ வகைகளில் ஏமாற்றும் கும்பல் இருந்து கொண்டே இருக்கின்றது. அதுவும், சீக்கிரமே செட்டில் ஆகி விட வேண்டும் என்கிற எண்ணத்தை ஆதாயம் ஆக்க பல மர்ம கும்பலகள் சமூக வலைத்தளங்களில் ஊடுருவ துவங்கி உள்ளன. அதிலும், ஹைலைட் மக்கள் இதை எல்லாம் கண்டு ஏமாறுவது தான்.
ஆம், இப்போது ஒரு புது வித மோசடி அரங்கேறி வருகிறது யூடியூப் ஐ வைத்து. என்ன கேட்டதுமே பயந்து விட்டீர்களா. யூடியூப் சேனல் மற்றும் வீடியோக்கள் பார்க்காத நபரே இந்த உலகில் இல்லை, அதுவும் அதில் வீடியோ பார்த்து நல் வழிகளில் வளர்வோரும் உண்டு, தீய வழிகளில் சிக்கி அழிவோரும் உண்டு.
ஆனால், மக்களின் பேராசை பசியை போக்க யூடியூப் ஐ பயன்படுத்தி சில விஷமிகள் புது வித மோசடியை துவங்கி உள்ளன. அதன்படி, ஒரு யூடியூப் வீடியோவை லைக் செய்தால் இவ்வளவு தொகை என்று கூறி குறுஞ்செய்தி வரும், அதன் வழியே ஒரு குறிப்பிட்ட பிராண்ட் இன் வீடியோவை லைக் செய்தால் உங்களின் வங்கி கணக்குக்கு ₹30 அல்லது ₹40 என கூறி விடுவார்கள்.
ஆசை யாரை விட்டது அப்படி செய்யும் போது நமது அக்கவுண்ட் விவரங்கள் ஹேக்கர் கைகளில் சென்று விடும். பின்பு, நமது அக்கவுண்ட் இல் உள்ள தொகை சுவாகா ஆகிவிடும் எனவும், பணம் கிடைக்கிறது என எதை வேண்டுமானாலும் செய்யலாம் என மக்கள் இருக்க வேண்டாம் என்றும், வாட்ஸ்அப், டெலிகிராம், மெஸேஜ் என எதன் வழியே தொடர்பு கொண்டாலும், தொடர்பை தொடர் வேண்டாம் என எச்சரிக்கை மணி அடிகின்றனர் சைபர் கிரைம் போலீசார்.