Mnadu News

ரகசிய ஆவணங்களை திருட்டு: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு.

2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதன் காரணமாக டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அப்போது டொனால்ட் டிரம்ப் தன்னுடன்; டிரம்ப் ‘க்ளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்’ என்ற மிக முக்கியமான ஆவணங்களை ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.தற்போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது டிரம்ப் மீது பதிவு செய்யப்படும் இரண்டாவது குற்றச்சாட்டாகும்.அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More