பரபரப்பாக முடிந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்போட்டியில் தனது அசூர பேட்டிங்கால் ரசிகர்களுக்கு விருந்தளித்த வாட்சன். காலில் அடிபட்டு இரத்தம் வழிவதை பொருட்படுத்தாமல் களத்தில் நின்று ஆடிய விசயம் தெரிந்தவுடன் உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மெச்சப்பட்டார்.
ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலுமொரு உத்வேகத்துடன் அடுத்த ஐபிஎல்லில் சந்திக்க வருகிறேன் என்று பேசியுள்ளார்.