Mnadu News

ரஜினி நோ! விஜய்க்கு யெஸ்! வெங்கட் பிரபுக்கு நேர்ந்த டுவிஸ்ட்!

தொடர் தோல்வி :

கோச்சடையான் பட தோல்விக்கு பிறகு ரஜினி இளம் இயக்குனர்கள் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விருப்பம் கொண்டு அவரது மகளும் இயக்குநருமான ஐஷ்வர்யாவை சரியான கதையுடன் ஒரு இயக்குனரை தேர்வு செய்ய கூறி உள்ளார். அதன் படி அவர் தேர்வு செய்தவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித். ஆம், அடுத்தடுத்து இரண்டு படங்கள் சூப்பர் ஸ்டாரை வைத்து எடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு சென்றவர்.

ரஜினியை ஈர்க்காத வெங்கட் பிரபு கதைகள்:

இந்த இயக்குநர் தேடும் படலத்தில் நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இரண்டு வெ்வேறு கதைகளை ரஜினியிடம் கூறிய நிலையில், அவை இரண்டுமே அவரை கவரவில்லை. ஏனென்றால் வெங்கட் பிரபு அவர்களுக்கும் அது ஒரு சோதனை காலம், எப்படியாவது ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்து விட வேண்டும் என்கிற கட்டாயம்.

மாநாடு வெற்றியும் – விஜய் அழைப்பும் :

மாநாடு படம் தான் இமாலய வெற்றி, விஜய் அவர்களே வெங்கட் பிரபுவை நேரில் அழைத்து ஒரு படத்தை பற்றி சிலாகித்து பேசி, தனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொன்னாராம். அதில் ஒன்று தான் தளபதி 68. ஆம், யாரும் எதிர்பாராத நேரத்தில் வெறும் வதந்திகளாக பரவி வந்த செய்தி, வெங்கட் பிரபு – விஜய் – ஏ ஜி எஸ் கூட்டணியில் என்பது உறுதியானது.

விஜய் 68 :

அதன்படி, விஜய் நடிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். திரிஷா விடம் டாக்ஸ் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல இந்த படத்துக்காக விஜய் 150 கோடிகள் வரை சம்பளமாக வாங்குகிறார் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. பார்க்கலாம் இந்த கூட்டணி எந்த மாதிரியான கதைக்களத்தில் கலக்க போகிறது என்பதை.

Share this post with your friends