தெலுங்கு இசை உலகை தன்வசத்தில் வைத்துள்ள இசை அமைப்பாளர் தமன். மிகவும் பிஸி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இவருக்கு தான் முதல் இடம். ஆனால், தமிழில் தன்னால் பெரிய சூப்பர் ஸ்டார்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உண்டு என்பதை பல பேட்டிகளில் அவர் பதிவு செய்துள்ளார்.
அது தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய் படத்துக்கு இசை அமைப்பதன் மூலம் நிறைவேறி உள்ளது. ஆம், வம்சி இயக்கத்தில் வாரிசு படத்துக்கு தமன் தெறிக்க விடும் இசையை கொடுத்துள்ளார் என்பதை 10 நாட்களுக்கு முன் வெளியான “ரஞ்சிதமே” பாடல் உணர்த்திவிட்டது. இந்த பாடல் 5 கோடி பார்வைகளை வெறும் 10 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
அடுத்த மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.