Mnadu News

ரஞ்சிதமே பாடலின் தெலுங்கு வேர்சன் வெளியீடு! ஆனால் பாடகரில் டுவிஸ்ட் வைத்த தமன்!

வாரிசு படத்துக்காக தமன் துள்ளல் இசையில், விவேக் மிரட்டும் வரிகளில், தளபதி விஜய், மான்சி குரல்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “ரஞ்சிதமே” பாடல் தற்போது வரை பல மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூபில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரிசுடூ படத்தின் இரஞ்சிதமே பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

ராமோஜெயா சாஸ்திரி வரிகளில், அனுராக் குல்கர்னி, மான்சி குரல்களில் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட அப்டேட்ஸ் தளபதி ரசிகர்களைக் திக்கு முக்காட செய்துள்ளது.

சாங் லிங்க்: https://youtu.be/FjjYlp4pm7E

Share this post with your friends