வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சென்ற மாதம் வெளியாகி தற்போது வரை 9 கோடி பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது.

அதற்குள், வாரிசு பட செகண்ட் சிங்கிள் தீ தளபதி வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

இதையெல்லாம் பார்த்த அஜித் ரசிகர்கள் எப்போது துணிவு பாடல்கள் வெளியாகும் என அப்டேட்ஸ் கேட்டு அன்பு தொல்லை செய்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சத்தமே இல்லாமல் வெளியாகி தற்போது யூடியூப் லிஸ்டில் நம்பர் ஒன் இல் இடம் பிடித்துள்ளது.

அனிருத் குரலில், ஜிப்ரான் இசையில், வைசாக் வரிகளில் வாரிசு செய்த அனைத்து சாதனைகளையும் தகர்த்து உள்ளது.

விரைவில் செகண்ட் சிங்கிள் “காசேதான் கடவுளடா” வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.