ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 பக்க கடிதம் எழுதி இருக்கிறார். அதில்,தற்போது விபத்து நிகழ்ந்த கிழக்கு ரயில்வேயில் 8 ஆயிரத்து 278 காலி பணியிடங்கள் உள்ளன. இதில், உயர் பொறுப்புகளுக்கான பணியிடங்களும் அடங்கும். பணியிடங்களை நிரப்புவதில் பிரதமர் அலுவலகமும், அமைச்சரவைக் குழுவுமே முக்கிய பங்காற்றுகின்றன. 90களில் இந்திய ரயில்வேயில் 18 லட்சம் பணியாளர்கள் இருந்தார்கள். அது தற்போது 12 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்?.அதே நேரம், ரயில் பயணிகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அரசு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய பணி. இதையே பாலசோர் ரயில் விபத்து உணர்த்தி இருக்கிறது. என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More