இந்தியா முழுவதும் உள்ள ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து போன் அல்லது தங்கள் சக பயணிகளுடன் உரையாடும் போதும், குழுவாக பயணம் செய்யும் போதும் உரத்தகுரலில் பேசக்கூடாது.அதோடு,இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் இசை, பாடல்களை ஒலிக்கக்கூடாது.அதே சமயம், இரவு 10 மணிக்கு மேல் இரவு விளக்குகளை தவிர மற்ற விளக்குகள் எரிய அனுமதியில்லை.அத்துடன், இரவு 10 மணிக்கு மேல் பயணிகளின் டிக்கெட்டுகளை டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்ய அனுமதியில்லை. அதே வேளையில், மிடில் பர்த் எந்த நேரத்திலும் திறக்கலாம் அதற்கு கீழ் பெர்த் பயணிகள் அதைப் பற்றி புகார் செய்ய முடியாது.இது ஒரு புறம் இருக்க, ஆன்லைன் உணவு சேவைகள் இரவு 10 மணிக்கு மேல் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உங்கள் உணவை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More