Mnadu News

ரஷ்யாவில் கிளர்ச்சிப்படை அபாயம் நீங்கியது: வாக்னர் படைத் தலைவர் பெலாரஸில் தஞ்சம்.

வாக்னர் படைத் தலைவர் பெலாரஸில் தஞ்சம் அடைந்துள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,ரஷ்ய அரசுக்கும் வாக்னர் தலைவர் பிரிகோஸினுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரிகோஸின் ரஷ்யாவை விட்டு வெளியேறி பெலாரஸில் தஞ்சமடைவார். ரஷ்யாவுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக பிரிகோஸின் மீதும் அவருடைய படையினர் மீதும் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.அவர்கள் ரஷ்யாவுக்கு இதுவரை செய்த சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபடாத வாக்னர் குழு வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் முறைப்படி சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends