ரஷ்ய அதிபர் புதின் அரசு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் ஒரு பதிலடியைப் பதிவிட்டுள்ளது. அதில், ‘ரஷ்ய அதிபர் தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைப்பார்’ என்று பதிவிட்டுள்ளது, தொடர்ந்து டெலிகிராமில் ஒரு ஆடியோவை வெளியிட்ட ப்ரிகோஸின், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More