வங்கதேசம், ஸ்வீடன், பெல்ஜியம் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடைசியாக பெல்ஜியம் வந்தடைந்தார். பெல்ஜியம் வந்த அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில இந்தியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக குரல் கொடுத்தன.இந்நிலையில்,பெல்ஜியம் தலைநகர் ப்ரூசல்ஸில் பேசிய ஜெய்சங்கர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரெலுக்கு இதன் நிமித்தமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.அதில், “ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். அது, ரஷ்ய கச்சா எண்ணெய்யை மூன்றாவது நாட்டில் வேறு எண்ணெய்யாக சுத்திகரிக்கப்பட்டால் அது ரஷ்ய எண்ணெய் அல்ல என்று கூறுகிறது. கவுன்சில் சட்டதிட்டம் 833 – 2014-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறாக மூன்றாம் நாட்டில் சுத்திகரிக்கப்படும் எண்ணெய் ரஷ்ய எண்ணெய்யாக எப்படி கருதப்படும்” என்று வினவினார். அதோடு;, ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தகம் மிக மிக சொற்பமானது. வெறும் 12 முதல் 13 பில்லியன் டாலர் அளவிலானதே என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More