1993 ஆம் ஆண்டு நடன இயக்குனராக உழைப்பாளி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சிறந்த பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் தான் ராகவா லாரன்ஸ். இன்று அவருக்கு 46 வது பிறந்த நாள். இவருடைய கொரியோவில் வந்த பாடல்கள் தனித்துவமாக இருந்ததால் இவர் தனித்து தெரிந்தார் ரசிகர்களின் பார்வைக்கு.

1999 ஆம் ஆண்டு நடிகராக ஸ்பீட் டான்ஸர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார் இவர்.

வெறும் நடனம், நடிப்பு என நின்று விடாமல் இயக்கத்திலும் இவர் முத்திரை பதித்தார். மாஸ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பின்பு இவரின் இயக்கத்தில் வந்த படங்கள் வசூல் சாதனை புரிய துவங்க புகழ் வெளிச்சத்துக்கு உரியவர் ஆனார்.
முனி, காஞ்சனா சீரிஸ் இவரை வசூல் ரீதியாக வெற்றி பெற வைத்தது.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் படம் தா “ருத்ரன்” . ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவர் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த படக்குழு ருத்ரன் படத்தின் சண்டைக் காட்சி ஒன்றை கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டு உள்ளது.

லிங்க் : https://youtu.be/PFbZkMhf3K0