கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, கர்நாடகாவின் கோலாரில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘நிரவ் மோடி, லலித் மோடி என, மோடி என்ற பெயர் உடைய அனைவருமே திருடர்களாக உள்ளனர்’ என்றார். ராகுல் இவ்வாறு பேசியதாக, குஜராத் முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க, – எம்.எல்.ஏ.,வுமான பூர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் நீதிபதி ஹெச். எஸ். வர்மா தீர்ப்பளித்தார். இதனால், அவர் எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி ஹெச். எஸ். வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More