வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார். பிறகு, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி தனக்கு இனிப்பு வாங்கி வந்த வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியை தருவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.