Mnadu News

ராகுல் இந்தியாவிற்கு எதிராக பேசி வருவது வெட்கக்கேடு: பா.ஜ.க சாடல்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலை மாணவர்கள் மத்தியில் கடுமையாக இந்தியாவை தாக்கி பேசினார்.தொடர்ந்து லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் பேசினார். இது சர்ச்சையை கிளப்பியது.இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஜனநாயகம், பார்லிமென்ட், அரசியல் நடை முறை மற்றும் நீதிமன்ற நடைமுறை ஆகியவற்றை தனது பேச்சுகளின் வழியே ராகுல் கேவலப்படுத்தி இருக்கிறார். ராகுல் காங்கிரஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என நீங்கள் உணருகிறீர்களா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்ற ராகுல் பொறுப்பற்ற மற்றும் வெட்கக்கேடான பேச்சுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா?. ராகுலின் விமர்சனங்களை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றால், கட்சி தலைவர் பதவியை தொடர இனியும் விரும்பவில்லை என சொல்லுங்கள்.சோனியா அவர்களே, உங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும்படி பா.ஜ., உங்களை கேட்டு கொள்கிறது. உங்கள் மகனின் இந்த பொறுப்பற்ற பேச்சுகளின் போது நீங்கள் எங்கே போனீர்கள்?. என்று அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More