Mnadu News

ராகுல் காந்தி பிரதமரானால் நாடு ஊழல் நாடாக மாறும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.

ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசோக் கெலாட் அரசு ஊழலில் முதலிடத்தில் உள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத்; தேர்தலில் அதை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.வருகின்ற தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் 300 இடங்களைப் பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.சோனியா காந்தியின் குறிக்கோள் ராகுல் காந்தியை பிரதமராக்குவது .லாலு யாதவின் இலக்கு அவரது மகன் தேஜஸ்வி யாதவை பிரதமராக்குவது. மம்தா பானர்ஜியின் நோக்கம் தனது மருமகன் அபிஷேக்கை முதல் அமைச்சராக்குவது என்றும், அதேபோல் அசோக் கெலாட் தனது மகன் வைபவை முதல் அமைச்சராக்க நினைக்கிறார் என்றும் கூறி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More