மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த்தீர்ப்புக்கு தடை விதிக்க ராகுல் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது ராகுல் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் விசாரணையை அம்மாநில உயர்நீதிமன்றம் மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More