குஜராத்திலுள்ள சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம், ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More