Mnadu News

ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா: இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா குறித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மூன்றாம் தேதி பல்வேறு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்
அதோடு, தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends