கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச், சௌராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.இந்நிலையில் ராஜஸ்தானின் பல இடங்களில் கன மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்மர், ஜலூர், சிரோஹி, பாலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசக்கூடும். அதே நேரம்,ஜெய்சால்மர், பிகானெர், ஜோத்பூர், சுரு, சிகார், நாகர், ஜுன்ஜ்{ஹனு, அஜ்மீர், உதய்பூர் மற்றும் ராஜ்சமந்த் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை வரை கனமழை தொடரும் என்று கணித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More