Mnadu News

ராஜஸ்தானில் தொடங்கியது பருவமழை: மின்னல் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு.

ராஜஸ்தானில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில பாலி, மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 21 வயதான தினேஷ் உயிரிழந்தார்.அதே நேரம், பரன் மாவட்டத்தில் சகோதரர்கள் இருவரான 46 வயதான ஹரிராம் 32 வயதான கமல் மற்றும் சிட்டோர்கர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் உதய்பூர், கோட்டா, பிகானேர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது.அஜ்மீர், பில்வாரா மற்றும் டோங்க் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends