ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் போன வருட பட்ஜெட் உரையை முதல்- அமைச்சர் அசோக் கெலாட் வாசித்ததால் அமளி ஏற்பட்டது. ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் அசோக் கெலாட்; பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பிறகு அவர் பட்ஜெட் உரையை சில நிமிடங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் அமைச்சர் மகேஷ் ஜோஷி, கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை முதல் அமைச்சர் அசோக் கெலாட் படிப்பதை கவனித்தார். உடனடியாக அசோக் கெலாட்டிடம் இதைக்கூறினார். உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசித்ததை நிறுத்தினார். உடனடியாக தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். எனினும் பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More