Mnadu News

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் விமானப் படை விமானங்கள் விபத்து:3 விமானங்கள் நொருங்கி விழுந்து எரிந்து சாம்பல்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படைத்தளத்தில் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட சுகோய் – 30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மொரானா என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. ராஜஸ்தான் மாநிலம் உச்செயின் என்ற பகுதியில் திறந்தவெளியில் விமானம் ஒன்று விழுந்து தீப்பற்றி எரிந்தது. அங்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த செய்தி உறுதி செய்யப்படுவதற்குள், மத்தியப்பிரதேசத்தில் இரண்டு விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் பரவின. அடுத்தடுத்து மூன்று விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More