Mnadu News

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும்: மத்திய அரசு பதில்.

நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2016ல் தொடங்கப்பட்ட ‘உதான்’ திட்டத்தின் கீழ் தேவைக்கு ஏற்ப நகரங்களை இணைக்க கூடிய வகையில் விமான சேவை நடந்து வருகிறது. உதான் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் உள்ள கடலோர காவல் படை விமானத் தளத்தில் இருந்து விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்றார்.

Share this post with your friends